விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி!
10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்களை சந்திப்பதற்காக நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் அறிவித்து இருக்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அவரது அரசியல் கட்சியை அறிவித்தார் விஜய். தொடர்ந்து வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
அரசியல் அறிவிப்பை அடுத்து விஜய்யின் சிறு செயல்களும் மக்களால் பெரிதும் கவனிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்தித்து அவர்களை கவுரவிக்க் முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெற்றி பெற்ற மாணவர்களை உற்சாகமடைய செய்யும் வகையில் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள், மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துக்கள். அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன், வாழ்வின் பல்வேறு துறை சார்ந்த வெற்றிகளைக் குவித்து, வருங்காலச் சமூகத்தின் சாதனைச் சிற்பிகளாக வலம் வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன். விரைவில் நாம் சந்திப்போம் என குறிப்பிட்டு இருக்கிறார்.