திமுக எம்.பி மீது வழக்கு பதிவு!
கடந்த 2020ல் பட்டியலின மக்கள் பற்றி அவதூறு கருத்தை தெரிவித்ததாக தயாநிதி மாறன் மீது புகார் எழுந்தது. அதாவது முதன்மை செயாலாளர் தங்களை தாழ்த்தப்பட்ட மக்களை போன்று நடத்துவதாக தயாநிதி பேசியிருந்தார்.
அதன் படி தற்போது திமுக எம்.பி தயாநிதி மாறன் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவ இடம் சென்னை என்பதால் கோவை ஸ்டேசனில் பதிவான வழக்கு இன்று சென்னை மத்திய குற்ற பிரிவுக்கு மாற்றப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.