நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி!

Jun 5, 2024 - 22:24
 3
நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி!

ஒடிசா முதல்வர் பதவியை நவீன் பட்நாயக் ராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலிலும் முதற்முறையாக பிஜூ ஜனதா தளம் பின்னடைவை சந்தித்திருக்கிறது. அங்கு ஆட்சியை இழந்துள்ளது. பாஜக ஆளும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது.

இந்நிலையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் நவீன் பட்நாயக். நவீன் பட்நாயக்கிடம் குறைவான எம்.பிக்கள் இருந்தாலும் கூட இந்தியா கூட்டணி தலைவர்கள் அவரிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.  

இதனிடையே, கடந்த 2000ம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முறை முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கினுடைய ஆட்சி இதோடு முடிவுக்கு வந்தது.

இது குறித்து ஜே.டி.யூ நிதிஷ்குமார் தரப்பில் கூறப்பட்டிருப்பது, இன்று என்.டி. ஏ வுக்கான ஆதரவை நாங்கள் கொடுப்போம் எனவும், 5 முதல் 6 கேபினெட் மந்திரி பதவிகளை தெலுங்கு தேசம் கேட்பதாக தகவல். ஜே.டி.யூவிடம் பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பும் போது கணிசமாக கேட்பதாக பதிலளித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து 7 லோக் கல்யான் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் வைத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் அவரை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் ஆந்திர பிரதேச முதலமைச்சர், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு , பீகார் முதலமைச்சர் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மாலை 6 மணிக்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் வைத்து இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

மத்தியில் ஆட்சி அமைப்பது, கூட்டணியில் புதிதாக கட்சிகளை இணைப்பது உள்ளிட்ட பல்வறு முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.. ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சரத் பவார், சுப்ரியா சுலே ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.