சுஜாதாவின் புதிய நீதிக்கதைகளில் இருந்து….
விக்கிரகம் ஒன்றை அவசரமாக கோயிலில் பிரதிஷ்டை செய்ய வேண்டியிருந்தது. இந்த சூழலில் எதிர்பாராத விதமாக அன்று ஸ்ட்ரைக் ஆகி விட்டது. என்ன செய்வதென்று அறியாத கோவில் நிர்வாகிகள் வேறு வழியின்றி கழுதை ஒன்றின் மேல் விக்கிரகத்தை ஏற்றிவந்தனர். அப்போது செல்லும் வழியில் எல்லாம் பொதுமக்கள் வணங்கினார்கள்.
இதை பார்த்த கழுதைக்கோ தன்னைத்தான் வணங்குவதாக நினைத்து ஒரே குஷியாகி விட்டது. கோயிலுக்கு வந்து விக்கிரகத்தை இறக்கி கோவிலுக்குள் வைத்தனர். பின்னர் கழுதையோ தனக்குத்தானே பேசிக்கொள்கிறது ‘என்னை எல்லோரும் வணங்குகிறார்கள் நான் இனி பொதி சுமக்க மாட்டேன்’ என் தன்னைத்தானே பெருமை பாராட்டிக்கொள்கிறது. அப்போது அங்கு வந்த வண்ணான் கழுதையை பொது சுமக்க அழைக்கிறான். ஆனால் கழுதையோ அதை மறுத்திவிட்டு கோவம் கொள்கிறது. அப்போது அந்த வண்ணான் சொன்னான், கழுதையே, நீ சற்று நேரத்தில் பார்த்த ஆரவார்மும் வணக்கங்களும் உனக்கல்ல, நீ சுமந்து வந்த விக்கிரகத்துக்கு தான் உன்னுடைய தன்மை என்னவோ அதை அறிந்து கொள், சிறுது நேர பெருமைக்காக நீ வந்த நிலையை மறந்து விட்டாயே என கூறி எப்போதும் ஏற்றி விடும் சுமையை விட அதிக சுமையை கொடுத்து 4 அடியையும் கொடுத்து இழுத்து சென்றான்.
இந்த கதையின் நீதி, எந்த நிலை வந்தாலும், வந்த நிலை மறக்க கூடாது, உனக்கு சேராத பெருமையை எடுத்துக் கொள்வது எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பது தான்.