மதுரவாயலில் ஆட்டோமொபைல்ஸ் ஊழியர்கள் கைது!
மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் உதயகுமார்(32), வேலப்பன்சாவடி அடுத்த புளியம்படு பகுதியில் உள்ள தனியார் ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்தில் மானேஜராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள நிறுவனத்தின் குடோனில் உள்ள பொருட்களை உதயகுமார் கணக்கெடுத்துள்ளார் அப்போது குடோனில் இருந்த 28 டன் எடை கொண்ட இரும்பு ஆட்டோமொபைல்ஸ் உதிரிபாகங்கள், 1 டன் செம்பு ஆட்டோமொபைல்ஸ் உதிரி பாகங்கள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது குறித்து மதுரவாயல் போலீசில் உதயகுமார் அளித்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்
மேலும் குடோனில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது அங்கு பணிபுரியும் அரக்கோணத்தை சேர்ந்த குடோன் பொறுப்பாளர் விமல்குமார்(40), அருப்புக்கோட்டையை சேர்ந்த டிரைவர் சதீஷ்குமார்(20), என்பது தெரியவந்தது.
இருவரும் சேர்ந்து சிறுக, சிறுக குடோனில் இருந்து ஆட்டோமொபைல்ஸ் உதிரிபாகங்களை திருடி எடுத்து சென்று விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து,இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1 டன் இரும்பு ஆட்டோ மொபைல்ஸ் உதிர் பாகங்கள், ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் உதிரி பாகங்களை எடுத்து செல்ல பயன்படுத்திய லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உதிரி பாகங்களை எடுத்து சென்று எங்கெல்லாம் விற்பனை செய்து உள்ளார்கள் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமுறைவாக உள்ள மணிகண்டன் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.