தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற அன்னதானம்!

Aug 21, 2024 - 02:02
Aug 21, 2024 - 02:04
 5
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற அன்னதானம்!

சென்னை விருகம்பாக்கத்தில் இந்திய நாட்டின் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.

இதில், ஆராய்ச்சி துறை  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் மாணிக்கவாசகம் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் மகளிர் அணியினர், தொண்டர்கள் ,மாவட்ட, பகுதி, வட்ட, கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இந்த  நிகழ்ச்சியில் பங்கேற்ற 500க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவாக அன்னதானம் வழங்கப்பட்டது.  

மேலும்,  சிறப்பு விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும் மருத்துவருமான. செல்லக்குமார்  சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.