திமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்…. சட்டப்பேரவையில் பரபரப்பு!

பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் கைது

Mar 24, 2025 - 13:34
 6
திமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்…. சட்டப்பேரவையில் பரபரப்பு!

திமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்…. சட்டப்பேரவையில் பரபரப்பு!

சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்.

முறைகேடு வழக்கில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரை சிபிஐ கைது செய்யப்பட்ட நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் போராட்டம் நடத்தினர்.

கடந்த 2 நாட்களாக பொதுப்பணித்துறை தலைமை அலுவலர் லஞ்சம் வாங்கியதாகவும், மற்றும் முறைகேடு நடத்தியதாகவும் சிபிஐ விசாரணை நடத்தி வந்தது.

நேற்று தலைமை பொறியாளர் தீனதயாளன் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளை சிபிஐ கைது செய்தது.

இதற்கு பொறுப்பேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் கைது குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க திமுக எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தியதையடுத்து, இதற்கு வாய்ப்பளிக்காத சட்டப்பேரவை தலைவர் இருக்கை முன்பு முற்றுகையிட்டு திமுக எம்.எல்.ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து சட்டப்பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்ட நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம் செய்யப்பட்டனர்.

திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்யப்பட்ட நிலையில் சட்டப்பேரவைக்கு வெளியில் சென்றும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.