டெஸ்லா நிறுவனத்தில் வேலை வாய்ப்பு | Job Opportunity at Tesla | Elon Musk
டெஸ்லா நிறுவனத்தில் வேலை வாய்ப்பு | Job Opportunity at Tesla | Elon Musk
தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையிலான பிரபல டெஸ்லா நிறுவனம் வேலைக்கு ஆட்கள் எடுத்து வருகிறது. இந்த வேலை ஒவ்வொரு நாளும் 7 மணிநேரம் நடப்பதுதான். அதற்காக நாள் ஒன்றுக்கு இந்திய மதிப்பில் ₹28,000 சம்பளமாக டெஸ்லா வழங்குகிறது. 5’7 முதல் 5’11 வரை உயரம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வாகனங்கள் மட்டுமின்றி, அதிநவீன அறிவியல் சாதனங்களை உருவாக்கும் முயற்சியில் டெஸ்லா ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், மனிதனைப் போன்ற ஹியூமனாய்ட் ஆப்டிமஸ் ரோபோக்களை உருவாக்கி, மனிதர்கள் செய்யும் விஷயங்களைச் செய்யப் பழக்கி வருகிறது. அந்த ரோபோக்களுக்கு மனிதர்களின் செயல்பாடுகளை கற்றுக்கொடுக்கவே இந்த வேலை.
இதற்காக மோஷன் கேப்ச்யூர் சூட் மற்றும் VR ஹெட் செட் அணிந்து கொண்டு, நாள் ஒன்றுக்கு 7 மணி நேரம் நடக்க வேண்டும். அப்படி நடக்கும்போது அந்த அசைவுகளை ரோபோக்களுக்கு கற்றுக்கொடுக்க முடியும். டெஸ்லா தலைமையகம் அமைந்துள்ள கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் இந்த வேலைக்கு விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது.