ஆருயிர் சகோதரரே வருக வருக – CM Stalin
செந்தில் பாலாஜியை வரவேற்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
இதில், அரசியல் சதி செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. எமெர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது என கூறியிருக்கிறார்.
உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது எனவும் ஆருயிர் சகோதரர் என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
ஆருயிர் சகோதரருக்கு 471 நாட்களுக்கு பிறகு உச்சநீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. அமலாக்கத்துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது.
கைது செய்து சிறையிலேயே வைத்து விடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன்.
என முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜிக்கு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.