அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ திமுகவில் இணைந்தார்!
2024ல் பாஜகவில் இணைந்து செயல்பட்டார்
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ திமுகவில் இணைந்தார்!
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சின்னசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். ஏற்கனவே அதிமுகவில் அண்ணா தொழிற்சங்கத்தில் பொறுப்பு வகித்தவர் சின்னசாமி.
கோவை மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தவர் சின்னசாமி.
அதிமுகவில் இருந்து பிரிந்து தற்போது தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார்.
சின்னசாமி அதிமுக தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்தபோது ரூ.8 கோடியை கையாடல் செய்ததாக புகார் எழுந்தது.
இந்த புகாரையடுத்து கோவையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சின்னசாமியை கைது செய்தனர்.
கையாடல் புகாரை தொடர்ந்து சின்னசாமியை அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
பின்னர், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவில் இணைந்து பின்னர் 2024ல் பாஜகவில் இணைந்து செயல்பட்டார்.
அதன் சில மாதங்களிலேயே மீண்டும் அதிமுகவிலேயே இணைந்து செயல்பட்டு வந்தார்.
அதிமுகவில் அதிர்ப்தியில் இருந்து வந்த சின்னசாமி தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.
