டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் வழக்குப்பதிவு!

Sep 26, 2024 - 12:48
 2
டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் வழக்குப்பதிவு!

லட்டுக்கு கலப்பட நெய் வழங்கிய புகாரில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தான புகாரின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த நிறுவனம் மீது கலப்பட பொருள் கொடுத்து இறப்பை ஏற்படுத்த முயன்றது உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

லட்டு தயாரிக்க வழங்கிய நெய்யில் மாட்டுக்கொழுப்பு, மீன் எண்ணெய் பன்றி கொழுப்பு உள்ளிட்டவை கலந்ததாக புகார் எழுந்தது.

இதனையடுத்து பால் நிறுவனம் பெற்ற உரிமம், தரச்சான்றுகள் உள்ளிட்டவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. பால் பொருள்கள் அனைத்திலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த மாதிரி முடிவுகள் கிடைத்த பிறகு அடுத்தகட்ட முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,

ஆய்வறிக்கை வெளியானதனை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.