காங்கிரஸ் மவுனம் சாதிப்பது ஏன்? – பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா

Jun 25, 2024 - 00:55
Sep 9, 2024 - 23:08
 13
காங்கிரஸ் மவுனம் சாதிப்பது ஏன்? – பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மவுனம் சாதிப்பது ன் என பாஜக தலைவர் ஜெ.பி நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ஜெ.பி நட்டா ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.

அதில், விஷ சாராய உயிரிழப்பில் அகில இந்திய காங்கிரசின் மவுனம் அதிர்ச்சி அளிக்கிறது, இந்த விவகாரத்தில் எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரசின் மவுனத்திற்கு என்ன காரணம் எனவும், அமைச்சர் முத்துசாமியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பாஜக தலைவர் ஜெ.பி நட்டா அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க காங்கிரசுக்கு நட்டா அழைப்பு விடுத்துள்ளார்.