பை நிறைந்தது - கூட்டணி கனிந்தது; பின்னுக்கு தள்ளப்படும் தேமுதிக!
விரோதத்தை தேமுதிக சம்பாதித்து உள்ளது
பை நிறைந்தது - கூட்டணி கனிந்தது; பின்னுக்கு தள்ளப்படும் தேமுதிக!
திமுகவுடன் தேமுதிக கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில் இந்த கூட்டணி தேமுதிக-க்கு தான் பின்னடைவாக இருக்கும் என கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த தேமுதிக கூட்டணி முடிவு இன்று அதிகாரப்பூர்வமாக உறுதியாகி உள்ளது.
திமுக கூட்டணியில் இணைந்ததன் மூலமாக மக்கள் விரோதத்தை தேமுதிக சம்பாதித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சட்டமன்ற தேர்தல் களத்தில் நின்று வெற்றி பெற வேண்டுமே தவிர சீட்டுகளுக்காக கூட்டணி சேர கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.
சீட் வேண்டுமென்பதை மட்டுமே வைத்து பேச்சுவார்த்தையை நடத்துவது ஜனநாயகத்திற்கு அழகல்ல என்றும், காங்கிரஸ் திமுக கூட்டணியில் நிலைக்குமா இல்லையா என்பது தான் இன்றைய மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
மேலும், காங்கிரஸை பலவீனப்படுத்தும் முயற்சியில் தான் தொடர்ந்து திமுக இருந்து வருகிறது – வைகை செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.
