விஜய்யுடன் இணைகிறாரா பண்ரூட்டி ராமச்சந்திரன்?... எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அரசியலில் பயணிப்பவர்!

ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகராக இருந்தவர்

Feb 19, 2026 - 16:05
 3
விஜய்யுடன் இணைகிறாரா பண்ரூட்டி ராமச்சந்திரன்?... எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அரசியலில் பயணிப்பவர்!

விஜய்யுடன் இணைகிறாரா பண்ரூட்டி ராமச்சந்திரன்?... எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அரசியலில் பயணிப்பவர்!

புதிய கட்சியை அறிவித்தார் மூத்த அரசியல் தலைவர் பண்ரூட்டி ராமச்சந்திரன்.

எம்.ஜி.ஆர் அண்ணா திமுக என்ற கட்சியை தொடங்கியிருப்பதாக பண்ரூட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

பண்ரூட்டி ராமச்சந்திரன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகராக இருந்தவர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்களுடன் பயணித்தவர்.

இது குறித்து பேசிய அவர், ஒருபுறம் அடையாள அரசியல், ஒருபுறம் கொள்கை அரசியல் சூறாவளி போல அடித்துள்ளது. அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கட்சி தொடங்கியுள்ளோம்.

ஒத்த கருத்துள்ள கட்சிகளுக்கு ஆதரவு அளிப்போம் என கூறியுள்ள நிலையில் தவெக இணையுமா என யூகம் எழுந்துள்ளது.  

முன்னதாக, திமுக, அதிமுக, பாமக, தனிக்கட்சி, தேமுதிக, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவர்.  

மேலும், எம்.ஜி.ஆர் அண்ணா திமுக தேர்தலில் போட்டியிடாது ஒத்த கருத்துடையவர்களுக்கு ஆதரவு அளிப்போம் என்றும், இந்த கட்சியில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட விரும்பினால் சுயேட்சையாக போட்டியிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

ஆட்சியில் பங்கு எனக் கூறியும் விஜய் உடன் எந்த பெரிய கட்சியும் கூட்டணியில் சேராத நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் சேருவார் எனக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் முஸ்தபா தற்போது தவெகவுக்கு ஆதரவு அளித்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு முதல் கட்சியாகவும், ஒரே ஒரு கட்சியாகவும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் பண்ருட்டி ராமச்சந்திரனின் எம்ஜிஆர் அண்ணாதிமுக கட்சியும் விஜய்க்கு ஆதரவு அளிக்குமா என்ற விவாதங்கள் எழுந்துள்ளன.