கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி
படப்பிடிப்பிற்காக சிவகங்கை சென்ற கங்கை அமரன் அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்து நடித்து வந்தார்
கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி
இசை அமைப்பாளர் கங்கை அமரன் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பிற்காக சிவகங்கை சென்ற கங்கை அமரன் அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்து நடித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உடனடியாக மானாமதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேல் சிகிச்சைக்கு அங்கு போதிய வசதிகள் இல்லாததால் அவர் சிவகங்கை மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
அவர் உடல் நலத்தில் என்ன பிரச்னை என்பதை தெரிவிக்கவில்லை.
இன்று அவர் மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகிறார். இதை தொடர்ந்து கங்கை அமரனின் மகன்களான வெங்கட்பிரபு மற்றும் பிரேம்ஜி மதுரை சென்றுள்ளனர்.