இந்தியாவில் 120 கோடி வசூலைக் கடந்த முபாசா தி லயன் கிங்
அவதார் - தி வே ஆப் வாட்டர்' படம் 390 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது
இந்தியாவில் 120 கோடி வசூலைக் கடந்த "முபாசா தி லயன் கிங்"
பெரி ஜென்கின்ஸ் இயக்கத்தில் கடந்த வருடம் டிசம்பர் 20ம் தேதி வெளியான ஹாலிவுட் திரைப்படம் 'முபாசா தி லயன் கிங்'.
இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்த படத்திற்கு ஹிந்தியில் ஷாரூக்கான், தெலுங்கில் மகேஷ் பாபு ஆகியோர் டப்பிங் செய்திருந்தனர்.
தமிழில் எந்த ஒரு முன்னணி நடிகரும் இப்படத்திற்கு டப்பிங் பேச மறுத்துவிட்ட நிலையில் அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன், நாசர், சிங்கம்புலி, ரோபோ சங்கர் ஆகியோர் பேசிய தமிழ் டப்பிங் படத்தின் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமாகவே இருந்தது.
'போட்டோ ரியலிஸ்டிக்கலி அனிமேட்டட்' படமாக வெளிவந்த இந்தப் படம் இந்தியாவில் 120 கோடி வசூலைக் கடந்து வெற்றி பெற்றுள்ளது.
200 மில்லியன் யுஎஸ் டாலர் செலவில் தயாரான இந்தப் படம் உலக அளவில் 470 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்துள்ளது.
2019ல் வெளிவந்த 'த லயன் கிங்' இந்தியாவில் 150 கோடி வசூலைப் பெற்றது. அந்த சாதனையை 'முபாசா' முறியடிக்கும் எனவும் கூறப்படுகிறது.
மேலும், இந்தியாவில் அதிக வசூலைக் குவித்த ஹாலிவுட் படம் என்ற பெருமையுடன் 'அவதார் - தி வே ஆப் வாட்டர்' படம் 390 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது.