குழந்தைகளை பாதுகாக்க மெட்டாவின் அதிரடி நடவடிக்கை! Instagram New Update

Sep 20, 2024 - 21:23
 3
குழந்தைகளை பாதுகாக்க மெட்டாவின் அதிரடி நடவடிக்கை! Instagram New Update

குழந்தைகளை பாதுகாக்க மெட்டாவின் அதிரடி நடவடிக்கை! Instagram New Update

மெட்டா நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் "டீன் அக்கவுண்ட்ஸ்" திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

Instagram Teen Accounts!

குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் இன்ஸ்டா கணக்கிற்கு TEEN ACCOUNTS என்ற புதிய அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்யப் போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், பெற்றோர் மற்றும் பாதுகாவலரின் அனுமதி பெறாத அனைத்து சிறார்களின் கணக்குகள் PRIVATE-ஆகவே இருக்கும் எனவும் புதிதாக உருவாக்கப்படும் கணக்குகளுக்கு இந்த மாற்றம் கொண்டுவரப்படுவது மட்டுமன்றி, ஏற்கனவே இருக்கும் கணக்குகளிலும் விரைவில் மாற்றம் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Instagram Sleep Mode!

இன்ஸ்டாக்ராமின் ஒரு புதிய அப்டேடின் ஒரு பகுதியாக, 18 வயதுக்குட்பட்ட Instagram பயனர்கள் ஒவ்வொரு நாளும் 60 நிமிடங்களுக்குப் பிறகு, இன்ஸ்டா பயன்பாட்டை மூடுமாறு அறிவிக்கப்படுவார்கள். அதுமட்டுமல்லால் இரவு நேரங்களில் தானாகவே ஸ்லீப் மோடிற்கு இன்ஸ்டாகிராம் சென்றுவிடும்.

டீன் ஏஜ் பயனர்கள் வயதை மாற்றி குறிப்பிட முடியாது!

சில டீன் ஏஜ் பயனர்கள் தங்கள் கணக்கைத் தொடங்கும்போது பொய்யான வயதைக் குறிப்பிட்டு, கட்டுப்பாடுகளைத் தவிர்க்க முயற்சி செய்யலாம். இதை எதிர்கொள்ள, இன்ஸ்டாகிராம் வீடியோ செல்ஃபி போன்ற முறைகளை பயன்படுத்தி சரிபார்க்க வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

விரைவில் அமலுக்கு வரும் புதிய அம்சம்!

இன்ஸ்டாகிராம் இந்த மாற்றங்களை புதிய கணக்குகளுக்கு உடனடியாக அமல்படுத்தும். அமெரிக்கா, கனடா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இப்போது உள்ள கணக்குகளுக்கும் இந்த அம்சம் அடுத்த இரண்டு மாதங்களில் விரிவுபடுத்தப்படும். மற்ற நாடுகளில் உள்ள இன்ஸ்டாகிராம் பயனர்கள் இந்த அப்டேட் ஜனவரியில் இருந்து அமலுக்கு வரும்.