தவெக -வில் விலைக்கு போன பதவி…. வெளியான அதிர்ச்சி ஆடியோ

பணம் இருந்தால் தான் பதவியா என்ன கருமம் இது

Jan 25, 2025 - 12:49
Jan 25, 2025 - 13:00
 154
தவெக -வில் விலைக்கு போன பதவி…. வெளியான அதிர்ச்சி ஆடியோ

தவெக -வில் விலைக்கு போன பதவி…. வெளியான அதிர்ச்சி ஆடியோ

விஜய்யின் தமிழக வெற்றிக்கழக கட்சியில் சாதி மற்றும் பணம் அதிகத்துடன் இருப்பவர்களுக்கு மட்டுமே கட்சியில் பொறுப்புகள் வழங்கப்படுவதாக கட்சி நிர்வாகிகள் தங்களது குற்றச்சாட்டை ஆடியோவாக பதிவு செய்து தவெக குழுவில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பதிவில், பதவிகள் விலைக்கு விற்கப்படுகின்றன எனவும், நகர செயலாளர் பதவிக்கு ரூ.15 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் இதனை விஜய் தலையீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணம் இருந்தால் தான் பதவியா என்ன கருமம் இது என தங்கள் ஆதங்கத்தை பதிவுகளாக வெளியிட்டு வருகின்றனர்.

மேலும், இது தொடர்பான வாட்சப் பதிவுகளும், ஆடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.