பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை கருத்து! Mohan G | Palani Pachamirtham

Sep 25, 2024 - 01:17
 3
பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை கருத்து! Mohan G | Palani Pachamirtham

பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை கருத்து! Mohan G | Palani Pachamirtham

திருப்பதியில் பக்தர்களுக்கு அளிக்கும் லட்டு பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு கலந்திருந்ததாக வெளிவந்த செய்தி தற்பொழுது வரை பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கோவிலின் புனிதம் கெட்டு விட்டதாக சில பரிகார பூஜைகளையும் நடத்தினர்.

இயக்குனர் மோகன் ஜி கைது!

இந்த நிலையில் திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறாக பேசி இருந்தார். அதாவது பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுவதாகப் ஒரு புது சர்ச்சையை கிளப்பினார். மேலும் அது பிரச்சினையாக மாறிய நிலையில் அந்த செய்தியை வெளிவராமல் தடுத்து பஞ்சாமிர்தத்தையும் அழித்து விட்டனர் எனவும் இது பற்றி பொதுமக்களுக்கு எதுவும் தெரியாது எனவும் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீது பழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மோகன் ஜியை சென்னையில் இருக்கும் அவருடைய இல்லத்தில் வைத்து கைது செய்துள்ளனர். மேலும் திருச்சி தனிப்படை போலீசார் சென்னையில் அவரை கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.