பழனிசாமி ஆசையில் மண் விழுந்துவிட்டது! – முரசொலி விமர்சனம்
பழனிசாமி உப்பு விற்கப் போனால் மழை பெய்கிறது. பாவம்!
பழனிசாமி ஆசையில் மண் விழுந்துவிட்டது! – முரசொலி விமர்சனம்
முரசொலி எடப்பாடி பழனிச்சாமி குறித்து விமர்சனம் செய்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.
‘டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மாட்டோம்’ என்று அடிபணிந்து விட்டது ஒன்றிய அரசு. சட்டமன்றத்தில் தி.மு.க. அரசு நிறைவேற்றிய தீர்மானத்துக்குக் கிடைத்த வெற்றி இது. போராடிய மக்களுக்குக் கிடைத்த வெற்றி இது.
‘திட்டத்தை ஒன்றிய அரசு வாபஸ் வாங்காது, இதை வைத்து தி.மு.க.வை கார்னர் பண்ணலாம்’ என்று வாய்ப்பந்தல் போட்டார் பழனிசாமி.
அவரது ஆசையிலும் மண் விழுந்துவிட்டது. பழனிசாமி எந்த மேட்டர் எடுத்தாலும் ஓரிரு நாளில் முடிவுக்கு வந்து விடுகிறது. அவர் உப்பு விற்கப் போனால் மழை பெய்கிறது. பாவம்! என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.