பம்பரமாய் சுழன்ற பீலா வெங்கடேசன்…. எப்படி இறந்தார் தெரியுமா?

பீலா ராஜேஷ் என்கிற பீலா வெங்கடேசன்

Sep 25, 2025 - 14:54
 69
பம்பரமாய் சுழன்ற பீலா வெங்கடேசன்…. எப்படி இறந்தார் தெரியுமா?

பம்பரமாய் சுழன்ற பீலா வெங்கடேசன்…. எப்படி இறந்தார் தெரியுமா?

சமூக நலத்துறை கூடுதல் இயக்குநர், ஆதிதிராவிடர் துணை செயலர், சுகாதாராத்துறை செயலர், மீன் வளத்துறை ஆணையராக இப்படி 24 மணி நேரமும் மக்களுக்காய் உழைத்த பீலா வெங்கடேசன் தனது 56 வயதில் உயிரிழந்தார்.

தமிழக அரசில் 1997ஆம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளில் பீலா வெங்கடேசன் பணியாற்றியுள்ளார்.

அடிப்படையில் மருத்துவரான பீலா வெங்கடேசன், இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வாகி, பல்வேறு முக்கியத் துறைகளில் செயலாளராகப் பணியாற்றிய அனுபவமிக்கவர்.  

தூத்துக்குடி மாவட்டம் நசரேத் அருகே வாழையடி கிராமத்தை பூர்வீகமாக கொண்ட இவர், மறைந்த தமிழக டிஜிபி எ.என்.வெங்கடேசன் – முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராணி வெங்கடேசன் தம்பதியரின் மகள் ஆவார்.

அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய பீலா ராஜேஷ் என்கிற பீலா வெங்கடேசன் 2019ம் ஆண்டு தமிழக சுகாதாரத்துறை செயலராக நியமிக்கப்பட்டார்.

கொரோனா முதற்கட்ட பரவலின் போது, முன்கள பணியாளராக இருந்து, முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டவர்.

பல்வேறு துறைகளிலும் மக்கள் மத்தியிலும், தமிழக அரசியல் களத்திலும் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

தமிழக அரசின் எரிசக்தி துறை முதன்மை செயலராக பணி புரிந்து வந்த பீலா வெங்கடேசன் சில மாதங்களாக தீராத தலைவலியால் அவதியுற்று வந்தார்.

பரிசோதனையின் போது அவருக்கு மூளையில் கட்டி ஒன்று இருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 3 நாட்களாக உடல்நிலை பாதிப்படைந்து வந்த நிலையில் தரமணியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.

அவரது உடலுக்கு உறவினர்களும், அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவரது உயிரிழப்புக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பிற அரசியல் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.