தமிழக அரசு எங்களை ஏமாற்ற நினைத்தால், 2026 சட்டமன்ற தேர்தலில் ஏமாறுவீர்கள் - ஜாக்டோ ஜியோ
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு

தமிழக அரசு எங்களை ஏமாற்ற நினைத்தால், 2026 சட்டமன்ற தேர்தலில் ஏமாறுவீர்கள் - ஜாக்டோ ஜியோ
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் அரசு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பட்ஜெட்டில் தங்கள் கோரிக்கை தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்ற அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதால் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்தநிலையில், மார்ச் 14-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று மாலை சென்னை திருவல்லிக்கேணி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டிடத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் முடிவில் அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் வெளியாகாததால், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று (மார்ச் 23) உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். அதன்பிறகு அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து மார்ச் 30-ஆம் தேதி கூடி முடிவெடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில், தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பாக இன்று உண்ணாவிர போராட்டம் நடத்தினர்.
சென்னையில் சேப்பாக்கம் எழிலகம், கோவை, திருச்சி, சேலம், நெல்லை, ராமநாதபுரம், மதுரை, நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று முழக்கமிட்டனர்.