ஆதாரத்தோடு சிக்கிய செந்தில் பாலாஜி - எம்.ஆர் விஜயபாஸ்கர் காண்பித்த பேப்பர்!
திமுகவுக்கு ஒரு சட்டம், எதிர்கட்சிக்கு ஒரு சட்டமா?

ஆதாரத்தோடு சிக்கிய செந்தில் பாலாஜி - எம்.ஆர் விஜயபாஸ்கர் காண்பித்த பேப்பர்!
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து நீதிபதி விசாரணையில் சாட்சிகளை காவல்துறை மிரட்டியதாக ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்.
தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது தவெக ஆம்புலன்ஸ் தவிர மற்ற 2 ஆம்புலன்ஸ்கள் பின்பற்றியது, செருப்பு வீசியது, போலீசார் தடியடி நடத்தியது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது இவை அனைத்துமே சந்தேகத்துக்கு இடமான ஒன்று தான் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இரவில் போஸ்மார்டம் செய்த உடல்களை கொடுக்கும் போது அத்தனை ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் இருந்தது, சம்பவ இடத்திற்கு முதலமைச்சர் விரைந்து வந்து உடனடியாக நிதிஉதவி அறிவித்தது இதெல்லாம் அரசின் வேகம் என பெருமை பேசும் திமுக அதன் கடமை என்பதை மறந்துவிட்டது.
இந்த சம்பவத்திற்கு உடனடியாக விரைந்து வந்த அரசாங்கம் இரவோடு இரவாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது, ஆனால் கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்தின் போது முதலமைச்சர் எங்கே போனார் என எம்.ஆர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை மெரினா ஏர் ஷோ மரணத்திற்கோ இந்த ஆர்வத்த காட்டலேயே அதுவும் உயிர் தானே, அந்த இடத்தில் தான் முதலமைச்சர் இருந்துருக்காரு.
41 உயிரிழந்த சம்பவம் குறித்து நீதிபதி விசாரணையில் சாட்களை காவல் அதிகாரி மிரட்டியதாகவும், அருகிலேயே நின்று கொண்டு சைகை காட்டியதாகவும் புகைப்படங்களும் வெளியாகி இருக்கு அந்த ஆதாரங்களையும் செய்தியாளர்களுக்கு காட்டிருக்காரு.
ஒரு சின்ன சந்துல பிரச்சாரம் நடத்துவதற்கு இந்த அரசு எப்படி அனுமதி கொடுத்தது, இதுவரை ஆளுங்கட்சியின் பிரச்சாரம் இது மாதிரியான இடத்தில் நடந்திருக்கிறதா? இல்லை நடத்துவார்களா?
இதுவா சட்டம்? திமுகவுக்கு ஒரு சட்டம், எதிர்கட்சிக்கு ஒரு சட்டமா?
கூட்டத்தில் பதிவெண் இல்லாமல் வந்த ஆம்புலன்ஸ்களை மட்டும் தான் இளைஞர்கள் தடுத்து நிறுத்திருக்காங்க எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சொன்னது தான் சரி.
இது திட்டமிட்டே செய்யப்பட்ட ஒரு சதி, அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை பலி கொடுக்குறது எந்த மாதிரியான ஒரு செயல் அப்டினு தெரியல.
பல்வேறு தரப்பிலிருந்து பல்வேறு கருத்துக்கள் விமர்சனங்கள் வந்தாலும், அதையெல்லாம் மறுக்குற மாதிரி எதுவும் இல்லை.
இத்தன வருஷமா ஆட்சியில் இருக்கும் உங்களுக்கு ஒரு கூட்டம் நடத்துவது எவ்வளவு சிரமம், எந்த மாதிரி இடங்களை தேர்வு செய்ய வேண்டும், ஒரு அவசர நிலைக்கு வெளியேர வழி என்ன என்பது குறித்த விவரங்கள் தெரியாமல் இருக்காது. ஆனால், இதெல்லாம் தெரிந்தும் இப்படி ஒரு இடத்தில் பிரச்சாரத்திற்கு அனுமதி கொடுத்தன் நோக்கம் என்னவா இருக்கும் அப்டிங்குறது தான் எல்லாரோட ஆதங்கமாகவும் இருக்கிறது.