தூத்துக்குடி டூ மேட்டுப்பாளையம் புதிய ரயில் சேவை! Thoothukudi to Mettupalayam Train
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் எல்.முருகன் புதிய இரயில் பயணத்தை துவக்கி வைத்தார்
தூத்துக்குடி டூ மேட்டுப்பாளையம் புதிய ரயில் சேவை! Thoothukudi | Mettupalayam
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் எல்.முருகன் புதிய இரயில் பயணத்தை துவக்கி வைத்தார்
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் இரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, வாரம் இரண்டு முறை தூத்துக்குடி வரை செல்லக் கூடிய புதிய இரயில் பயணத்தை துவக்கி வைக்கும் விழாவில் இன்று கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், தினசரி 5 முறை கோவை இரயில் நிலையம் சென்று வரும் MEMU இரயிலானது, போத்தனூர் இரயில் நிலையம் வரை நீட்டிக்கப்பட்டுள்ள பயண சேவையையும் துவக்கி வைத்தார்.
கோவையிலிருந்து திருப்பதி சென்றுவரக்கூடிய இரயிலானது, சாமல்பட்டி இரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கான அறிவிப்பும், மைசூரு-மயிலாடுதுறை வழித்தடத்தில் இயங்கி வந்த இரயிலானது, கடலூர் துறைமுகம் வரை இயங்கும் வகையில் அதன் பயணத் தொலைவும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மேட்டுப்பாளையம் முதல் தூத்துக்குடி வரை சென்று வரக்கூடிய இந்த புதிய இரயில் பயணத்தின் மூலம், நீலகிரி மாவட்டத்தில் விவசாயம் செய்யப்படுகிற தேயிலைப் பொருட்களை, வெளிநாடுகளுக்கு எளிதில் ஏற்றுமதி செய்வதற்கான வழி ஏற்பட்டுள்ளது. இந்த விழாவில், தெற்கு இரயில்வே அதிகாரிகள், மாவட்ட கவுன்சிலர் திருமதி.சங்கீதா, கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.