நிம்சுலைடு வலி நிவாரண மருந்துக்கு மத்திய அரசு தடை | Nimesulide Ban
நிம்சுலைடு வலி நிவாரண மருந்துக்கு மத்திய அரசு தடை | Nimesulide Ban
புது டெல்லி:
வலி மற்றும் காய்ச்சல் நிவாரண மருந்தான நிம்சுலைடு மீது மத்திய அரசு தடை விதித்துள்ளது. பொதுமக்களின் உடல்நல பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அறிவிப்பின்படி, 100 மி.கிராம் அளவைத் தாண்டிய நிம்சுலைடு வாய்வழி (மாத்திரை, சிரப்) மருந்துகள் தயாரிப்பு, விற்பனை மற்றும் விநியோகத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் தொடர்ந்து பயன்படுத்தும் போது கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தடை மருந்துகள் மற்றும் அழகுப் பொருட்கள் சட்டம் – 1940ன் கீழ் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் மற்றும் மருந்தகங்கள் அரசின் உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நிம்சுலைடு மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
