சட்டப்பேரவையில் எழுந்த சர்ச்சை; மது போதையில் வந்தாரா பஞ்சாப் முதல்வர்? உடனடி டெஸ்ட் எடுக்க வேண்டும் – எதிர்கட்சிகள் அமலி!
பகவந்த் மான் – க்கு மது பரிசோதனை செய்ய வேண்டும்
சட்டப்பேரவையில் எழுந்த சர்ச்சை; மது போதையில் வந்தாரா பஞ்சாப் முதல்வர்? உடனடி டெஸ்ட் எடுக்க வேண்டும் – எதிர்கட்சிகள் அமலி!
பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மதுபோதையில் சட்டப்பேரவைக்கு வந்ததாக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பகவந்த் மான் – க்கு மது பரிசோதனை செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால், ஆளுங்கட்சியினர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை இதனால் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தொடக்கத்தில் சுமூகமாக இருந்த விவாதம் பிறகு சூடு பிடிக்க தொடங்கியது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ சுக்பால் சிங் கைரா அவையில் மொபைல் பயன்படுத்தியதற்கு முதல்வர் பகவந்த் மான் எதிர்ப்பு தெரிவித்து பேசியிருந்தார். இதற்கு பிறகு இரு தரப்பிலிம் விவாதம் முற்றியது.
முதலமைச்சர் உட்பட அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் உடனடியாக ஆல்கோ மீட்டர் மற்றும் ஊக்க மருந்து பரிசோதனை செய்ய வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் பிரதாப் சிங் பாஜ்வா கேட்டுக்கொண்டார்.
முதலமைச்சர் பகவந்த் மான் பேரவைக்கு மது அருந்திவிட்டு வந்துள்ளார் என்றும் குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து, பரிசோதனைக்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் அனைத்து எதிர்கட்சி எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
