பார்லிமெண்டில் வெளியிட்ட கணக்கு விவரங்கள் – போரால் இவ்வளவு செலவாகியுள்ளது; இன்னும் பல்லாயிரம் கோடி தேவை!

பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது

Apr 30, 2026 - 11:10
 2
பார்லிமெண்டில் வெளியிட்ட கணக்கு விவரங்கள் – போரால் இவ்வளவு செலவாகியுள்ளது; இன்னும் பல்லாயிரம் கோடி தேவை!

பார்லிமெண்டில் வெளியிட்ட கணக்கு விவரங்கள் – போரால் இவ்வளவு செலவாகியுள்ளது; இன்னும் பல்லாயிரம் கோடி தேவை!   

போர் குறித்த செலவினங்கள் பற்றி பெண்டகனின் தற்காலிக கணக்காய்வாளர் ஜூல்ஸ் ஹர்ஸ்ட் தெரிவித்துள்ளார்.

அதிபர் ட்ரம்ப்பின் ஈரான் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவாகியுள்ளது. போர் செலவு விவரங்களை ஜூல்ஸ் ஹர்ஸ்ட் பார்லிமெண்ட் உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதலில் அயதுல்லா கமேனி உடபட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

ஆத்திரமடைந்த ஈரான் இஸ்ரேல் மற்றும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது பதில் தாக்குதலை நடத்தியது.

25 பில்லியன் டாலர் செலவிற்கு, அதிநவீன ஆயுதங்கள் பயன்பாடு, கப்பல்கள், விமானங்கள், வீரர்களுக்கான செலவினம், பராமரிப்பு போரில் இழந்த ஆயுதங்கள் கணக்கு காரணங்கள் ஆகும்.  

போர் விமானங்கள், விமானங்கள். ட்ரோன்கள், ரேடார்கள் உள்ளிட்ட பல்வேறு அமெரிக்க ராணுவ சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளன.

மேற்காசியாவில் உள்ள அமெரிக்கா தளங்கள் மீது ஈரான் நடத்திய கடுமையான தாக்குதல்களால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை சீரமைக்க பல்லாயிரம் கோடி ரூபாய் தேவைப்படலாம் எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.