சனிக்கிழமை மட்டும் ஏன் பிரச்சாரம்…. உங்கள் மிரட்டலுக்கு விஜய் ஆள் இல்லை ஸ்டாலின் சார்! 

நான் என்னதான் பேசுவது?

Sep 20, 2025 - 16:52
Sep 20, 2025 - 16:53
 7
சனிக்கிழமை மட்டும் ஏன் பிரச்சாரம்…. உங்கள் மிரட்டலுக்கு விஜய் ஆள் இல்லை ஸ்டாலின் சார்! 

சனிக்கிழமை மட்டும் ஏன் பிரச்சாரம்…. உங்கள் மிரட்டலுக்கு விஜய் ஆள் இல்லை ஸ்டாலின் சார்! 

சனிக்கிழமை மட்டும் பிரச்சாரத்திற்கு வருகிறேன் என அறிவித்த நாட்களில் இருந்தே பலறும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

சனிக்கிழமையை தேர்வு செய்ததன் நோக்கம் அனைவரையும் விடுமுறை நாட்களில் சந்திக்க வேண்டும் யாருக்கும் எந்த இடையூறும் இருக்க கூடாது என்பது தான்.

அரசியலாக இருந்தாலும் ஓய்வு என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று அதை கொடுக்க வேண்டும்.

பிரச்சாரத்திற்கு அனுமதி தராத காரணங்கள் வெறும் சொத்தையாக இருக்கும்.

மற்ற அரசியல் தலைவர்களோ அல்லது மத்திய அமைச்சர்களோ மக்கள் சந்திப்புக்கு வந்தால் இவ்வளவு இடர்பாடுகள் செய்வீர்களா?

நான் பேசுவதே 3 நிமிடம் அதிலும் இங்கே தான் பேச வேண்டும், இவ்வளவு நேரம் தான் பேச வேண்டும், இதை தான் என பல்வேறு விதிமுறைகள் விதிக்கின்றனர்.

நான் பேசும் 3 நிமிடங்களில் இவ்வளவு விதிமுறைகள் வைத்தால் நான் என்னதான் பேசுவது?

நாங்கள் மக்களை சந்திக்க வந்தால் மட்டும் மின்சாரத்திலிருந்து பல்வேறு இடர்பாடுகள் வருகின்றன.

முதலமைச்சர் அவர்களே மிரட்டி பார்க்கிறீர்களா அதற்கு இந்த விஜய் ஆள் இல்லை என விஜய் காட்டமாக பேசியுள்ளார்.