2011 கருத்து கணிப்பு கூட பொய்யாகித்தான் போனது; மே. 4ல் வெளியாவது தான் முடிவு; மக்கள் தீர்ப்பு எழுதிவிட்டார்கள்!
நிதர்சனமான தீர்ப்பு மே. 4ல் வெளியாவது தான்
2011 கருத்து கணிப்பு கூட பொய்யாகித்தான் போனது; மே. 4ல் வெளியாவது தான் முடிவு; மக்கள் தீர்ப்பு எழுதிவிட்டார்கள்!
கருத்து கணிப்புகள் பத்தி எங்களுக்குக் எந்த கவலையும் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கடந்த 2011ல் கூட இப்படித்தான் சொன்ன கருத்து கணிப்புகள் அனைத்தும் பொய்யாக தான் போனது,
அப்போதும் திமுக தான் பெரும்பான்மையில் உள்ளது திமுக தான் ஆட்சி அமைக்கும் என்று சொன்னார்கள். ஆனால், அதிமுக 203 தொகுதிகளுக்கும் மேல் வென்று அபரிமிதமான வெற்றியை பெற்றது.
தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அப்படித்தான், 200 தொகுதிகளுக்கு மேலாக வெற்றி பெற்று எடப்பாடியார் தமிழகத்தின் பொற்கால முதல்வராக வருவது காலத்தின் கட்டாயம் நடக்கும்.
தற்போது மட்டுமல்ல எப்போதும் வெளியாகும் கருத்துக்கணிப்புகள் எல்லாம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தான்.
எங்களைப் பொறுத்தவரை 23 அன்று தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற நேரத்தில் மக்கள் தீர்ப்பளித்து விட்டார்கள்.
