என்.டி.ஏவில் இணைந்த காரணம் இதுதான் - டிடிவி தினகரன்
அழுத்தம் காரணமாக இணையாமல் இருந்தேன்
என்.டி.ஏவில் இணைந்த காரணம் இதுதான்!
திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் என்.டி.ஏ பொதுக்கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அகற்ற பிரதமர் மோடி வருகை தந்துள்ளார் என கூறியுள்ளார்.
பொதுக்கூட்ட மேடையில் ஈபிஎஸ் பெயரை டிடிவி தினகரன் உச்சரித்ததும் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.
அழுத்தம் காரணமாக என்.டி.ஏ கூட்டணியில் இணையாமல் இருந்தேன்.
மக்கள் விரோத குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் உள்ளோம்.
என்.டி.ஏ கூட்டணியில் வர வேண்டும் என எனது கட்சி தொண்டர்கள் விரும்பினார்கள்.
நாங்கள் எல்லாம் அம்மாவின் தொண்டர்கள் என்பதை எதிரிகள் மறந்துவிட்டார்கள் புரட்சி தலைவரின் வழி வந்தவர்கள் என்றும்,
எங்களுக்குள் சண்டை சச்சரவுகள் இருந்தது உண்மைதான் தமிழ்நாட்டின் நலன் கருதியே ஒன்றாக இணைந்துள்ளோம் என்றும் பேசினார்.
