ஆளுநர் அறிக்கையில் உண்மை உள்ளது; ஆளுநர் செஞ்சதுல தப்பே இல்லை – ஈபிஎஸ்

திமுக அரசு பதவி விலக வலியுறுத்தி வெளிநடப்பு

Jan 20, 2026 - 15:27
 2
ஆளுநர் அறிக்கையில் உண்மை உள்ளது; ஆளுநர் செஞ்சதுல தப்பே இல்லை – ஈபிஎஸ்

ஆளுநர் அறிக்கையில் உண்மை உள்ளது; ஆளுநர் செஞ்சதுல தப்பே இல்லை – ஈபிஎஸ்

ஆளுநர் உரைகளில் ஆளுநர் உரைகள் மட்டும் தான் இடம்பெற வேண்டுமே தவிர வேறு எந்த கருத்தையும் சொல்ல முடியாது எனவும் உரையில் நீங்கள் செய்த தவறை சரியென என்னால் படிக்க முடியாது என ஆளுநர் கூறுகிறார் இதில் என்ன தவறு? என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற உண்மையான சம்பவங்கள் மட்டும் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டும். போதைப்பொருள் புழக்கத்தை தடுக்காததால் மாணவர்கள், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

ஆளுநர் உரையில் முதலமைச்சர் தனது சொந்த கருத்துகளை பதிவு செய்கிறார். ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் உண்மை தகவல்கள் உள்ளன.

தமிழக அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் பெரும்பாலானவை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் 4வது இடத்தில் இருந்து 6வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆளுநர் கூறியுள்ளார்.

நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி விலக வலியுறுத்தி வெளிநடப்பு செய்துள்ளோம்.