மம்தாவால் ஆடிப்போன நீதித்துறை; இறங்கி வாதாடிய முதலமைச்சர்!
வரலாற்று சாதனை படைத்துள்ளார்
மம்தாவால் ஆடிப்போன நீதித்துறை; இறங்கி வாதாடிய முதலமைச்சர்!
- இந்திய வரலாற்றியேலே முதன்முறை ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் தனக்காகவும் தனது மாநில மக்களுக்காகவும் வாதாடி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
- மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர் தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன சட்டப்பிரிவு 32ன் கீழ் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர்.
- இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது முதலமைச்சர் மம்தா பேனர்ஜியே வழக்கறிஞர் உடையில் ஆஜராகி வாதாடினார்.
- கொல்கத்தாவில் உள்ள ஜோகேஷ் சந்திர சவுத்ரி சட்டக்கல்லூரியில் பட்டம் பெற்ற மம்தா பேனர்ஜி வழக்கறிஞராக பல வழக்குகளை வாதாடி உள்ளார்.
- அரசியலில் தீவிரமாக இறங்கிய பின்னர் 2003ம் ஆண்டுக்கு பிறகு மம்தா பேனர்ஜி வாதாடவில்லை.
- 23 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வழக்கறிஞராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் தற்போது வாதாடியுள்ளார்.
- எஸ்.ஐ.ஆர் பணிகளின் போது அரசுப்பணியாளர்களுக்கு அதிக வேலை அளிக்கப்பட்டதால் சிலர் உயிரிழந்தனர்.
- எஸ்.ஐ.ஆர் பணிச்சுமை காரணமாக கொல்கத்தாவில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார் மம்தா பேனர்ஜி.
- ஒவ்வொரு முக்கிய பிரச்சனைகளையும் முன்னிறுத்தி மம்தா பேனர்ஜி தனது அமைச்சர்களுடன் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார்.
