வேட்டையன் v/s கங்குவா

Aug 19, 2024 - 19:42
Aug 20, 2024 - 18:21
 12
வேட்டையன் v/s கங்குவா

ரஜினிகாந்த் நடிச்சிருக்க வேட்டையன் படம் அக்டோபர் 10 ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கதா லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்ப வெளியிட்டுருக்காங்க.

ஜெய்பீம் படத்த இயக்குன ஞானவேல் ராஜா தான் இந்த படத்தையும் இயக்கி இருக்காரு. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகள்ல வெளியாக இருக்கு.

அதே நேரத்துல அன்னைக்கே சூர்யா நடிக்கிற கங்குவா திரைப்படமும் வெளியாக இருக்கதும் உறுதியா சொல்லப்படுது, இது குறித்து வெளியான தகவல் ஏற்கனவே சில குழப்பங்கள ஏற்படுத்தியிருந்துச்சு. அந்த வகையில 2 படமும் ஒரே நாள்ள ரிலீஸ் ஆகுறது சூர்யா ரசிகர்களுக்கு அதிர்ப்பதிய ஏற்படுத்தியிருக்கு அப்டின்னு தான் சொல்லனும்.

2 படங்களுமே தனி ஒரு கவனத்தை ஏற்படுத்தியிருக்க நிலையில .இதுக்கான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்திய பயங்கரமா அதிகரிச்சிருக்கு. சூர்யா, ரஜினி இவங்க ரெண்டு பேருக்கான படத்தோட காம்பெட்டிசன்ல எந்த அளவுக்கு ,எந்த படத்த ரசிகர்கள கொண்டாடுவாங்க அப்டிங்குறது படம் ரிலீஸ் ஆனா தான் தெரியும்.