ஓபிஎஸ் தகுதியை இழந்துவிட்டார்…நான் சொன்னது சொன்னது தான்!

ஒத்த கருத்துடைய கட்சியினரை கூட்டணியில் இணைப்போம்

Mar 27, 2025 - 18:10
 3
ஓபிஎஸ் தகுதியை இழந்துவிட்டார்…நான் சொன்னது சொன்னது தான்!

ஓபிஎஸ் தகுதியை இழந்துவிட்டார்…நான் சொன்னது சொன்னது தான்!

ஓபிஎஸ் பிரிந்தது பிரிந்தது தான் இனிமேல் ஒருபோதும் அதிமுகவில் இணைய வாய்ப்பே இல்லை என அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.   

ஓபிஎஸ் பிரிந்ததோடு மட்டுமில்லாமல் கட்சியை எதிரிகளிடம் அடமானம் வைத்துவிட்டார்.

என்றைக்கு தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் தலைமையில் அராஜகம் நடைபெற்றதோ அன்றைக்கே அவர் தகுதியை இழந்துவிட்டார்.

அதிமுகவின் கோவிலாக பார்க்கக்கூடிய தலைமை அலுவலகத்தை இடித்தது பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்று என்றும், அதிமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மீனவர்களுக்காக குரல் கொடுக்கும். 

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது கண்டனத்துக்குரியது என்றும் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

கூட்டணி குறித்த முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் இன்னும் அதற்கான நாட்கள் இருக்கிறது.

தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்கள் இருக்கும் நிலையில் தற்போது எது சொன்னாலும் நிலைக்காது.

அதிமுகவை பொறுத்தவரை திமுகவை தவிர வேறு எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி இல்லை . ஒத்த கருத்துடைய அனைத்து கட்சியினரையும் கூட்டணியில் இணைப்போம் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.