வேலூரில் ஸ்டாலின், சேலத்தில் அமித்ஷா; விஜய்க்கு மட்டும் கட்டுப்பாடு - தவெக அருண்ராஜ் பேட்டி
எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை
வேலூரில் ஸ்டாலின், சேலத்தில் அமித்ஷா; விஜய்க்கு மட்டும் கட்டுப்பாடு - தவெக அருண்ராஜ் பேட்டி
விஜய்யின் பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டை போடுவதாக தவெக அருண்ராஜ் பேட்டி அளித்துள்ளார்.
வேலூரில் விஜய் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்தோம் அனுமதி கடிதம் கொடுத்த பிறகு முதல்வர் நிகழ்ச்சி நடப்பதாக சொல்கிறார்கள்.
வேலூரில் முதல்வர் நிகழ்ச்சி நடப்பதால் எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை இது ஜனநாயகத்திற்கு எதிரானது.
இதனையடுத்து, சேலத்தில் வரும் 13ம் தேதி விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கடிதம் கொடுத்துள்ளோம் அங்கு அமித்ஷா வர இருப்பதாக சொல்கிறார்கள்.
திமுக பாஜகவுக்கு என்ன உறவு இருக்கிறதோ என்று தெரியவில்லை. தவெக விருப்ப மனு வெறும் காகிதங்களுக்கான படிவம் அல்ல; மக்களின் கனவுகளை தாங்கிப் பிடிக்கும் உறுதிமொழிப் பத்திரம். தொண்டர்கள் விருப்ப மனு கொடுப்பதற்காக திரண்டு வந்ததை பார்த்தோம்.
தமிழக அரசியலில் ஒரு பெரும் மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர் என்பதற்கு சாட்சியாக தவெகவின் சரித்திரம் தொடங்கிவிட்டது. இது மிகப்பெரிய மாற்றமாக உருவெடுக்கும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருளில் மூழ்கிவிட்டது ஆனால் ஆட்சியில் இருக்கும் முதலமைச்சரும் சரி அமைச்சர்களும் சரி கவலை இல்லாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு வாய்க்கு வந்ததையெல்லாம் ரீல் சுத்தி கொண்டிருக்கிறார்கள்.
மது அருந்துவதை தட்டிக் கேட்டால் கொலை, கஞ்சா விற்பனை குறித்து புகார் கொடுத்தால் கொலை இதுதான் தற்போதைய நிலை இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தான் திமுக என அருண்ராஜ் பேட்டி அளித்துள்ளார்.
