3 வது மொழியில் உள்ள நடைமுறை சிக்கல்!
கொள்கை ரீதியாக எதிர்க்கபட்டாலும் நடைமுறையில் கொண்டுவருவது சாத்தியமில்லை
3 வது மொழியில் உள்ள நடைமுறை சிக்கல்!
மும்மொழிக் கொள்கை என்பது சமீப காலமாகவே சர்சசைக்குரிய ஒன்றாக பேசப்பட்டு வருகிறது
இந்த நிலையில் இந்த மும்மொழி கொள்கையில் உள்ள நடைமுறை சிக்கல் என்னென்ன என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில், மும்மொழி கொள்கையை செயல்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொள்கை ரீதியாக எதிர்க்கபட்டாலும் நடைமுறையில் கொண்டுவருவது சாத்தியமில்லை என தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை 45ஆயிரம் அரசுப்பள்ளிகளும், 8ஆயிரம் உதவி பெரும் அரசுப்பள்ளிகளும் உள்ளன.
இதில் லட்சணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்தநிலையில் 3வது மொழியாக ஒரு மொழியை கொண்டுவரும் போது தோராயமாக ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் என்ற பட்சத்தில் கூட மொத்தம் 45 ஆயிரம் ஆசிரியர்கள் புதிதாக தேவை.
ஆனால், இது சாத்தியமில்லை எனும் போது ஒரு பள்ளிக்கு 3 ஆசிரியர்களாவது தேவை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து மத்திய அரசு கூறுகையில் 3 வது மொழியாக இந்தியை எடுக்க வேண்டுமென கூறவில்லை அதற்கு மாறாக அவர்களுக்கு எந்த மொழியில் விருப்பம் இருக்கிறதோ அதை தேர்வு செய்துகொள்ளலாம் கூறுகிறது.
அனால் இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் ஒரு வகுப்பில் 60 மாணவர்கள் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மொழியை தேர்வு செய்து படிப்பர் அப்போது அவர்களுக்கென தனி ஆசிரியர்களை நியமிப்பது சிரமமாகி விடும்.
ஏற்கனவே தமிழகத்தில் இரு மொழி கொள்கை அமலில் உள்ளது இதில் மும்மொழிக்கொள்கை என்பது நிமிஷம் சாத்தியமில்லை என அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.