மன அழுத்தத்தை குறைக்கும் 5 வகையான யோக ஆசனங்கள் | 5 Powerful Yoga Asanas to Relieve Stress Naturally
தற்போதைய சூழலில் மன அழுத்தம் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இதை கட்டுக்குள் கொண்டு வர சில யோகாசனங்கள்
மன அழுத்தத்தை குறைக்கும் 5 வகையான யோக ஆசனங்கள் | 5 Powerful Yoga Asanas to Relieve Stress Naturally
தற்போதைய சூழலில் மன அழுத்தம் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இதை கட்டுக்குள் கொண்டு வர சில யோகாசனங்கள்:
1) பாலாசனம்
முழங்காலில் அமர்ந்து, முன் நோக்கி குனிந்து, நெற்றி தரையில் தொட வேண்டும். பின்னர் கைகளை முன் நீட்ட வேண்டும். இவ்வாறு 1–3 நிமிடங்கள் வரை ஆழ்ந்த சுவாச பயிற்சி செய்ய வேண்டும்.
பயன்கள்:
- மன அழுத்தம் மற்றும் கவலை குறைவு
- முதுகு, தோள்பட்டை மற்றும் கழுத்து பகுதி தளர்ச்சி
- நரம்பு அமைதி மற்றும் மன அமைதி அதிகரிக்கிறது
2) சவாசனம்
யோகா மேட்டில் முதுகில் நேராக படுத்து, கால்களை சற்று பிரித்து, பாதங்களை தளர்த்த வேண்டும். கைகளை உடலின் பக்கத்தில் சற்று விலக்கி வைக்கவும். உள்ளங்கைகள் மேல்நோக்கி வைத்துக் கண்களை மூடி இயல்பாக மூச்சை உள்வாங்கி வெளியிட வேண்டும்.
பயன்கள்:
- முழு உடலும் மனமும் தளர்ச்சி
- மன அழுத்தம் மற்றும் கவலை குறைவு
- நரம்பு அமைதி
- இரத்த அழுத்தம் சமநிலையாக்கப்படுகிறது
3) பத்மாசனம்
தரையில் கால்களை நீட்டி அமர்ந்து, வலது பாதத்தை இடது தொடையின் மேல், இடது பாதத்தை வலது தொடையின் மேல் வைக்கவேண்டும். முதுகு நேராக வைத்துக் கொண்டு கைகளை முழங்கால்களில் வைத்து கண்களை மூடி மெதுவாக ஆழ்ந்த மூச்சு விடவேண்டும்.
பயன்கள்:
- மன அமைதி மற்றும் ஒருமை அதிகரிப்பு
- கவலை மற்றும் மன அழுத்தம் குறைவு
- முதுகெலும்பு நேராக நிலைபெற உதவும்
4) ஆனந்த பாலாசனம்
முதுத்தண்டு நேராக தரையில் படுத்து, முழங்கால்களை மடக்கி மார்புக்கு அருகே கொண்டு வந்து இரு கைகளால் பாதங்களின் வெளிப்புறத்தைப் பிடிக்கவும். மெதுவாக ஆழ்ந்த மூச்சுடன் 30 விநாடி – 1 நிமிடம் நிலைத்திருக்க வேண்டும்.
பயன்கள்:
- மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறைவு
- இடுப்பு மற்றும் கீழ் முதுகு தளர்ச்சி
- செரிமானம் மேம்பாடு
5.பசிமோத்தானாசனம்
தரையில் நேராக அமர்ந்து கால்களை நீட்டி முதுகை நேராக வைத்துக்கொள்ள வேண்டும் மெதுவாக முன் வளைந்துச் சாமரசமாக பாதங்களை தொட முயற்சிக்கவும். கைகளால் கால்களை பிடிக்கலாம் அல்லது முயற்சிக்கலாம் பின் கண்களை மூடி ஆழ்ந்து 30 விநாடி முதல் 1 நிமிடம் வரை மூச்சி பயிற்ச்சி செய்யலாம்
பயன்கள்:
- முதுகு, பின்புற உடல் பிணிவுகள் குறைவு
- மன அமைதி மற்றும் நிம்மதி அதிகரிப்பு
- மன அழுத்தம் மற்றும் சோர்வை குறைக்கிறது
