நாடாளுமன்றத்தில் காங்கிரஸின் அத்துமீறல்… அம்பலமான வீடியோ ஆதாரம்!
யார் நியாயப்படுத்த முடியும் - கிரண் ரிஜுஜூ
நாடாளுமன்றத்தில் காங்கிரஸின் அத்துமீறல்… அம்பலமான வீடியோ ஆதாரம்!
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் பெண் எம்.பிக்கள் நடந்து கொண்ட விதம் குறித்த வீடியோக்களை கிரண் ரிஜூஜூ வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் எதிர்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபடும் காட்சிகள் இருந்தன.
மற்றொரு வீடியோவில் எதிர்கட்சி பெண் எம்.பிக்கள் பிரதமர் இருக்கை அருகே சூழ்ந்து கொண்டிருந்த காட்சிகள் உள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்த கிரண் ரிஜுஜூ, காங்கிரஸ் கட்சி தங்களது இழிவான செயல்களை கண்டு பெருமை கொள்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் இத்தகைய செயல்களை யார் நியாயப்படுத்த முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
சபையின் கண்ணியத்தை பேணி பாதுகாக்க வேண்டும் ஆனால் அது காங்கிரஸில் இல்லை.
எதிர்கட்சி எம்.பிக்களுடன் எந்த பாஜக எம்.பிக்களும் முரட்டுத்தனமாக ஈடுபட கூடாது என எங்கள் தலைமை எங்களது கட்சி எம்.பிக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
ஒரு வேலை, எங்கள் எம்.பிக்களை தடுத்து நிறுத்தாமல் காங்கிரஸ் எம்.பிக்களுடன் மோத அனுமதித்திருந்தால் சபையில் மோசமான நிலை ஏற்பட்டிருக்கும்.
மிக முக்கியமாக, பார்லிமெண்டின் கண்ணியத்தையும், புனிதத்தையும் பாதுகாப்பதில் எங்களுக்கு மிகுந்த அக்கறை உள்ளது. நாங்கள் அதை மனதில் வைத்து பின்பற்றி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
