தூக்கம் என்பது முக்கியமான ஒன்று…. தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள்?
மனிதர்கள் சீரான தூக்கம் தூங்க வேண்டும்

தூக்கம் என்பது முக்கியமான ஒன்று…. தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள்?
நவீன உலகத்தில் வாழும் மனிதர்கள் இதயக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான உடல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு மிக முக்கிய அடிப்படை காரணமே முறையான தூக்கமின்மை தான், மனிதர்கள் சீரான தூக்கம் தூங்க வேண்டும்.
பிறந்த குழந்தையாக இருக்கும் பொழுது 10 - 11 மணி நேரம் தூங்குவார்கள், அதன்பின் 7 முதல் 8 மணிநேரம் சீரான தூக்கம், 60 வயதை கடந்த பிறகு இந்த தூக்கம் 6 முதல் 5 மணி நேரமாக குறையும்.
கடந்த 1980ஆம் ஆண்டு வரை கூட, சூரியன் அஸ்தமித்த உடன் மக்கள் உறங்கச் சென்று விடுவார்கள், அவர்களுக்கு தியேட்டர்கள் மட்டுமே ஒரே பொழுதுபோக்கு அதனைத் தாண்டி எந்த பொழுதுபோக்குமில்லை. வேலை, தூக்கம், நண்பர்கள் என வாழ்ந்தார்கள்.
1990-களின் பிற்பகுதியில் தகவல் தொழிநுட்ப வளர்ச்சியால், எல்லா வீடுகளுக்கும் தொலைக்காட்சி அத்தியாவசிய பொருளாக மாறியது. அது மக்கள் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
ஆண்ட்ராய்டு செல்போன் வருகை மொத்தமாக மனிதர்களின் தூக்கத்தை தலைகீழாக புரட்டி போட்டு விட்டது
குறிப்பாக இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், என பல்வேறு செயலிகள் மனிதனின் தூக்கத்தை இழக்கச் செய்து விட்டன. இது மட்டுமல்லாமல், உணவு, விளையாட்டு என வாழ்க்கை முறை மாறிக் கொண்டே வருகிறது.
தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள்;
முறையற்ற தூக்கம் இருந்தால் இதயக் கோளாறு, நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உடல் சார்ந்த பிரச்னைகளும் ஏற்படும், அதுமட்டுமல்லாமல் வீட்டில் பிரச்னை, வேலை பார்க்கும் இடத்தில் கோபம் என மனம் சார்ந்த பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு, அதீத மன அழுத்ததிற்கு வித்திடும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இப்போது வாழும் 50% பேருக்கு தூக்கம் சார்ந்த பிரச்சனை ஏற்பட்டு மனநல சார்ந்த பாதிப்புகள் இருக்கின்றன. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவது நல்லது அல்லது மருத்துவரை அணுகி இதற்கு தீர்வு காணலாம்.
மனிதர்களின் செயல்பாடு முற்றிலுமாக இயற்கைக்கு எதிராக இருப்பதால் எதிர்காலத்தில் தூக்கம் சார்ந்த பிரச்னைகளுக்காக ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் உதயமாகலாம் என மன நல மருத்துவர்கள்.
குதிரை, நாய், பறவைகள் சரியான நேரத்தில் தூங்கச் சென்று விடும் ஆனால் மனிதன் அதற்கு எதிராக செயல்படுகிறான். இரவு நேர வேலை செய்பவர்கள், காலையில் முழுமையாக தூங்க வேண்டும் ஆனால் அதனை செய்வதில்லை இது அவர்களது வேலையில் பல்வேறு சிக்கல்களை கொண்டு சேர்க்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.