இதுதான் ரூல்; கட்டாயமா பின்பற்றனும்…. ஸ்ட்ரிக்டா சொன்னா தேர்தல் அதிகாரி!

பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யக் கூடாது

Mar 16, 2026 - 15:52
 2
இதுதான் ரூல்; கட்டாயமா பின்பற்றனும்…. ஸ்ட்ரிக்டா சொன்னா தேர்தல் அதிகாரி!

இதுதான் ரூல்; கட்டாயமா பின்பற்றனும்…. ஸ்ட்ரிக்டா சொன்னா தேர்தல் அதிகாரி!

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்தித்து பேசி வருகிறார்.

பறக்கும் படையினரின் சோதனையில் பிடிபடும் பணம் அல்லது பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் இருந்தால் ஒப்படைக்கப்படும்.  

சோதனையின் போது பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யக் கூடாது என அறிவுறுத்தியுள்ளோம். பெரிய அளவிலான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படும்.

தேர்தலை முன்னிட்டு 2106 பறக்கும் படைகள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம், ஏப்ரல் 3, 4 விடுமுறை என தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சியினர் காலை 6 மணி முதல் இரவு10 மணி வரை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடலாம் என்றும் இன்னும் பல்வேறு முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.