மும்மொழிக்கு சந்திரபாபு நாயுடு ஆதரவு!

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பல மொழி மையங்கள் நிறுவப்பட வேண்டும்

Mar 6, 2025 - 12:27
Mar 6, 2025 - 15:50
 3
மும்மொழிக்கு சந்திரபாபு நாயுடு ஆதரவு!

மும்மொழிக்கு சந்திரபாபு நாயுடு ஆதரவு!

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை திட்டம் தொடர்பாக தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகள் எதிர்த்து வரும் நிலையில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய சந்திரபாபு நாயுடு, மக்கள் தொகை மேலாண்மை மீது அனைவரும் கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

தொகுதி மறுவரையறை தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை எனினும், அது நடக்க வேண்டிய நேரத்தில் நடத்தப்படுமெனவும் கூறியுள்ளார்.

மேலும், உலகளவில் நாம் போட்டியிட பல மொழிகளை கற்க வேண்டியது அவசியம் எனவும், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பல மொழி மையங்கள் நிறுவப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.