ஒரே மேடையில் ஈபிஎஸ் – அண்ணாமலை…. கட்சியினரிடையே மிகுந்த வரவேற்பு

ஒரே மேடையில் ஈபிஎஸ் – அண்ணாமலை…. கட்சியினரிடையே மிகுந்த வரவேற்பு
சென்னையில் நடைபெற்ற ஜி.கே மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை ஒரே மேடையில் ஒன்றாக அருகருகே அமர்ந்து சிரித்து பேசியது கட்சியினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னையில் உள்ள மூப்பனார் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொருளாலர் எல்.கே சுதீஷ் உள்ளிட்ட பலறும் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து, மேடையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி அண்ணாமலையை சகோதரர் என குறிப்பிட்டு பேசினார்.
அதன் பின்னர் பேசிய அண்ணாமலை, எடப்பாடியை அண்ணன் என்று குறிப்பிட்டு பேசினார்,
இருவரும் எலியும், பூனையாக இருந்து வந்த நிலையில், ஒரே மேடையில் அருகருகே அமர்ந்திருந்தனர்.
இங்கு வந்துள்ள அனைவரும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் நாற்காலியில் அமரப்போகிறார் என்று குறிப்பிட்டீர்கள். அந்த மாற்றம் வரட்டும்” என அண்ணாமலை பேசினார்.
இது இரு கட்சியினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.