தே.ஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியானது!

அதிமுக – 171; பாஜக – 27

Mar 23, 2026 - 16:11
 3
தே.ஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியானது!

தே.ஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியானது!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, என்.டி.ஏ கூட்டணியில் அரசியல் நடவடிக்கைகள் வேகமெடுத்து வருகின்றன. தொகுதி பங்கீடு தொடர்பான இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். அவர், கூட்டணி கட்சித் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தி, நீண்டநாளாக நிலுவையில் உள்ள தொகுதி ஒதுக்கீடு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்ய உள்ளார் என்று கூறப்படுகிறது.

NDA கூட்டணியில் உள்ள பல கட்சிகள் தங்களுக்கு சாதகமான மற்றும் வலுவான தொகுதிகளை கோரியுள்ளதால், பேச்சுவார்த்தை சற்று சிக்கலான நிலையை எட்டியதாக இருந்தது.

எனினும், தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால், கடைசி நேரத்தில் சமரசம் ஏற்பட்டு ஒப்பந்தம் உறுதியாகும் வாய்ப்பு அதிகம் என அரசியல் வட்டாரங்கள் நம்புகின்றன.

இந்த சந்திப்பு முடிவுகள், தமிழ்நாட்டில் NDA கூட்டணியின் தேர்தல் திட்டத்தையும், போட்டி நிலைப்பாட்டையும் தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

இறுதி கட்ட ஆலோசனை முடிவடைந்த பின்னர், தேஜ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதியானது

அதிமுக – 171, பாஜக – 27, பாமக – 18, அமமுக – 11, தமாக – 3, சுயேட்சை – 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.