திமுக-வை விளாசிய சீமான் தரப்பு வழக்கறிஞர்கள்!
சீமான் உறுதியாக விசாரணைக்கு ஆஜாராவார்

திமுக-வை விளாசிய சீமான் தரப்பு வழக்கறிஞர்கள்!
சீமான் வீட்டு காவலாளிகள் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் இன்று சீமான் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்று எச்சரிக்கை விடுக்கபட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று சீமான் தரப்பில் அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி உள்ளனர்.
இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர்கள் திமுகைவும், காவல்துறையின் அடாவடித்தனத்தனத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இது குறித்து பேசிய வழக்கறிஞர்கள், 2 முறை சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. சம்மன் அனுப்பிய உடனேயே விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும், அதற்கு அவகாசமும் கேட்டிருந்த நிலையில் அதனை பொருட்படுத்தாத காவல்துறையினர், அரசியல் கட்சியின் அழுத்ததினால் வீட்டிற்கு சென்று சம்மன் ஒட்டியதோடு, வீட்டு காவலாளியை தரக்குறைவாக பேசியுள்ளனர்.
இதன் பின்னர் தான் வாக்குவாதமாக மாறி உள்ளது. முதலில் காவல்துறை தான் இவ்வாறு மோசமாக நடந்துள்ளது.
கட்டாயமாக அவர்களை தகாத முறையில் நடத்தியிருக்கின்றனர் இந்த கைது நடவடிக்கை முற்றிலும் சதி என தெரிவித்துள்ளார்.
4 வாரம் கால அவகாசம் கேட்ட நிலையில் 20 நிமிடத்திற்குள் இந்த செயலில் ஈடுபட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது.
எங்கள் தரப்பு முழுவதும் காவல்துறையையும் சட்டதையும் மதிக்க கூடிய இடத்தில் இருக்கிறோம். இந்த நிலையில் வேண்டுமென்றே சீமானின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளனர்.
4நாள் அவகாசத்தில் ஒரு நாளாவது கொடுத்திருக்கலாம். பத்திரிக்கையாளர்களின் காட்சிகளால் தான் உண்மை வெளி வந்துள்ளது.
ஒரு வேலை பத்திரிக்கையாளர்கள் யாரும் இதை படம் பிடிக்காமல் வைத்திருந்தால் நிச்சயமாக மக்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் உண்மை தெரிய வந்திருக்காது.
மேலும், சில நாட்களாகவே பெட்ரோல் குண்டு வீசப்படும் என்ற அச்சம் வந்திருந்ததால் தான் காவலாளி கையில் துப்பாக்கி வைத்திருந்தார்.
எனவே பாதுகாப்பு கருதி தான் அவர் அந்த துப்பாக்கியை வைத்திருந்தார். அதுவும் அந்த துப்பாக்கி சரியான உரிமம் பெற்ற துப்பாக்கி தான்,
குறிப்பாக அவர் முன்னாள் ராணுவ வீரர் அவருக்கு சட்டம் ஒழுங்கு முழுமையாக தெரியும் அவர் சட்டம் ஒழுங்கை மதிக்க கூடியவர்.
எனவே இது காவல்துறையின் திட்டமிட்ட சதி என தெரிவித்துள்ளனர்.
நிச்சயமாக சீமான் விசாரணைக்கு ஆஜராவார். அவர் இதே வழக்கு காரணமாக ஏற்கனவே 3 மணி நேர விசாரணைக்கு ஒத்துழைத்தவர் தான்.
எனவே, அவர் உறுதியாக விசாரணைக்கு ஆஜாராவார் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.