மாலை 5 மணிக்கு ஆஜராகலனா சீமானுக்கு பிடிவாரண்ட்…நீதிமன்றம் உத்தரவு !

வணக்கம் சொல்வதற்காக விசாரணை அல்ல

Apr 7, 2025 - 13:24
 3
மாலை 5 மணிக்கு ஆஜராகலனா சீமானுக்கு பிடிவாரண்ட்…நீதிமன்றம் உத்தரவு !

மாலை 5 மணிக்கு ஆஜராகலனா சீமானுக்கு பிடிவாரண்ட்…நீதிமன்றம் உத்தரவு!

டிஐஜி வருண்குமார் வழக்கில் மாலை 5 மணிக்குள் சீமான் ஆஜராகவில்லை என்றால் அவருக்கு பிடிவாரண்ட் வழங்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 30 ம் தேதி எஸ்.பியாக இருந்த வருண்குமார் சீமான் மீது திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தன்னை குறித்தும் தனது குடும்பத்தினர் குறித்தும் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இணையதளத்தில் அவதூறு பரப்புவதாகவும், இதனால் வருண் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கலங்கத்தை ஏற்படுத்துவதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி சீமான் ஆஜராக வேண்டும் என கூறியிருந்த நிலையில் சீமான் அப்போது ஆஜராகாமல் அவர் சார்பாக அவரது வழக்கறிஞர் ஆஜராகி இருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கானது மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இன்று மாலை 5 மணிக்கு சீமான் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமெனவும், மீறினால் அவர் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும், தினமும் வணக்கம் சொல்வதற்காக இந்த விசாரணை அல்ல எனவும், வாய்தா வாங்கி இந்த வழக்கை சீமான் இழுக்க நினைக்காமல் வழக்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விசாரணைக்கு உரிய நேரத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.