தொகுதி மறுவரையறை வாக்கெடுப்பு - பாஜகவுக்கு ஆதரவு!
333/543 வாக்குகள்
தொகுதி மறுவரையறை வாக்கெடுப்பு - பாஜகவுக்கு ஆதரவு!
நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் நீட்சியாக, மூன்று நாள்கள் சிறப்பு அமா்வு இன்று(ஏப்ரல் 16) காலை தொடங்கியது.
மக்களவை – பேரவைகளில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமலாக்கவும், அதற்கு ஏதுவாக மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850 வரை அதிகரிக்கவும் வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்களை அறிமுகம் செய்து, விவாதித்து நிறைவேற்றும் நோக்கில் இந்த அமா்வு நடைபெற்று வருகிறது.
மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்களை மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் இன்று தாக்கல் செய்தார்.
யூனியன் பிரதேச சட்டத்திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.
இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டவுடன் காங்கிரஸ் தரப்பில் திரும்பப் பெற வலுயுறுத்தப்பட்டது.
இந்திய கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதல், அரசியல் சாசனத்தையே கபளீகரம் செய்ய நினைக்கிறது பாஜக. இந்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் எம்பி வேணுகோபால் வலியுறுத்தினார்.
இதனிடையே, மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு தமிழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டம் தெரிவித்துள்ளனர்.
மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதாவை அறிமுகம் செய்ய வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்பில் மொத்தம் = 333/543 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆதரவு வாக்குகள் =251
எதிர்ப்பு வாக்குகள் =185 பெறப்பட்டுள்ளன.
இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதால் மத்திய அரசு கொண்டு வந்த 3 மசோதாக்களும் மக்களவையில் அறிமுகம் செய்யப்படுகிறது.
