சூடு பிடிக்கும் வாதம்… நடைபெற்று வரும் விசாரணை!  

தாமதமாக வந்தது ஒரு குற்றமா

Oct 3, 2025 - 16:18
 3
சூடு பிடிக்கும் வாதம்… நடைபெற்று வரும் விசாரணை!   

சூடு பிடிக்கும் வாதம்… நடைபெற்று வரும் விசாரணை!

 

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்றையை தினம் 7 பொதுநல வழக்குகள் அதை தவிர்த்து முன் ஜாமீன் வழக்குகள் மீதான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏற்கனவே அந்த பொதுநல வழக்குகள் மீதான தீர்ப்பும் சில வழக்குகள் தள்ளுபடியும் செய்யப்பட்டது.

தற்போது முன் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் முன் ஜாமீன் கோரிய மனுக்களுக்கும் தற்போது விசாரணை தொடங்கியுள்ளது.

புஸ்ஸி ஆனந்த் முன் ஜாமீன் கோரிய வழக்கை ஒத்திவைக்க காவல்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

புஸ்ஸி ஆனந்தை பொறுத்தவரை அவர் ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எனவே அவர் எங்கும் தப்பித்து செல்ல மாட்டார்.

இந்த வழக்குக்கான முழு ஒத்துழைப்பை அவர் கொடுப்பார் இதன் காரணமாக அவருக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என புஸ்ஸி ஆனந்த் தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டுள்ளது.

7 மணி நேரம் தாமதமாக வந்ததற்காக வழக்குப்பதிவு செய்துள்ளனர், தாமதமாக வந்தது ஒரு குற்றமா? என மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தாமதமாக வந்ததை வைத்து கைது செய்ய முற்படுவது, இதனால் ஜாமீன் வழங்க மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், மக்களை ஒழுங்கபடுத்தக் கூடிய இடத்தில் காவல்துறை இல்லை எனவும் மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதே போல், சொந்த கட்சி தொண்டர்களை கொலை செய்யும் நோக்கம் தவெகவுக்கு இல்லை எனவும் புஸ்ஸி ஆனந்த் தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது.

தொடர்ந்து இந்த விசாரணை இரு தரப்பிலும் வாதங்களோடு நடைபெற்று வருகிறது.