தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
"தீ' திராவிட நாடெங்கும் பரவும்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
மத்தியில் ஆளும் பாஜக அரசின் தென்னிந்திய மாநிலங்களுக்கு அநீதி இழைக்கும் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வீடுகள், பொது இடங்களில் கறுப்பு கொடிகள் ஏற்றப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது இல்லத்தில் கறுப்பு கொடி ஏற்றி மசோதா நகலை தீயிட்டு எரித்து முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினார்.
தமிழ்நாடு உட்பட தென்னிந்திய மாநிலங்களுக்கு அநீதி இழைக்கும் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிரான போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற வேண்டும் என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தொகுதி மறுவரையறை மசோதா நகலை தீ வைத்து எரித்தும் தமது வீட்டில் கறுப்பு கொடி ஏற்றியும் முதல்வர் ஸ்டாலின் இன்று ஏப்ரல் 16-ந் தேதி போராட்டம் நடத்தினார்.
பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ! என தமது எக்ஸ் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
