எதற்காக எதிர்ப்பு; மறுவரையறையின் நோக்கம் என்ன?

புதிய ஆணையத்தை அமைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது

Apr 16, 2026 - 16:40
 2
எதற்காக எதிர்ப்பு; மறுவரையறையின் நோக்கம் என்ன?

எதற்காக எதிர்ப்பு; மறுவரையறையின் நோக்கம் என்ன? 

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிர் இட ஒதுக்கீட்டை விரைந்து கொண்டு வருவதற்கான நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

இந்த சிறப்பு கூட்டத்தொடரில் 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன.  

அரசமைப்பின் 131வது திருத்த மசோதா 2029ம் ஆண்டே மகளிர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்தவும், மக்களவை இடங்களை 543ல் இருந்து 850 வரை அதிகரிக்கவும் வழி செய்கிறது.

2-வதாக தாக்கல் செய்யப்படும் மசோதா தொகுதிகளை மறுவரையறை செய்ய ஒரு புதிய ஆணையத்தை அமைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

மறுவரையறை பணிகளை 2027 கணக்கெடுப்புக்கு பதிலாக 2011 கணக்கெடுப்புகளை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளவும் இந்த மசோதா வழி செய்யும்.

யூனியன் பிரதேசங்களிலும் மகளிர் இட ஒதுக்கீட்டை கொண்டு வருவதற்கான மசோதாவும் தாக்கல் ஆக உள்ளது.  

மேலும், 2011 மக்கள் தொகையை அடிப்படையாகக் கொள்ள அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.