தத்தளிக்கும் மக்கள்… கண்டுகொள்ளாத திமுக….அலட்சியப்போக்கின் அவலம்!

இது திமுகவின் இன்னொரு ஊழலா?

Oct 25, 2025 - 15:24
 5
தத்தளிக்கும் மக்கள்… கண்டுகொள்ளாத திமுக….அலட்சியப்போக்கின் அவலம்!

தத்தளிக்கும் மக்கள்… கண்டுகொள்ளாத திமுக….அலட்சியப்போக்கின் அவலம்!

ஆண்டுதோறும் பெய்யும் மழையால் தத்தளிக்கும் மக்கள் தமிழகத்தில் ஆண்டுதோறும் பெய்யும் வடகிழக்குப் பருவமழை, முடிவில் ஒரே விதமான துன்பியல் கதையைத்தான் விட்டுச் செல்கிறது. முக்கியச் சாலைகளில் வெள்ளப் பெருக்கு, உள் சாலைகளில் முழங்கால் அளவு தண்ணீர், மழைநீருடன் கழிவுநீர் கலப்பு என மக்களின் இயல்பு வாழ்க்கை தலைகீழாகிறது. ₹4,000 கோடி செலவில் திமுக அரசால் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட வடிகால் திட்டத்திற்குப் பிறகும், இந்தக் காட்சி ஏன் மாறவில்லை? இது திமுகவின் இன்னொரு ஊழலா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

வானிலை ஆய்வு மையம் சென்னைக்கு 'மஞ்சள்' எச்சரிக்கையும், அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கையும் விடுத்துள்ள நிலையில், இந்த ஆண்டு மழையைச் சமாளிக்கத் தலைநகரம் எந்த அளவுக்குத் தயாராக உள்ளது? கடந்த வார நிலவரத்தைப் பார்த்தால், ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகம் முந்தைய அனுபவங்களில் இருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

அடையாளம் மாறாத வெள்ளப் பகுதிகள், போக்குவரத்து ஸ்தம்பிப்பு, கழிவுநீர்க் கலப்பு, மாசுபட்ட நீராதாரங்கள், கொசுக்களின் படையெடுப்பு, முக்கியச் சாலைகள் தத்தளிப்பு, பிற மாவட்டங்களிலும் பாதிப்பு, போக்குவரத்து பாதிப்பு, தடுக்கும் ஆக்கிரமிப்பு என வெள்ள அபாயத்தைக் குறைக்கவும், நீர் தேங்குவதைத் தடுக்கவும் அறிமுகப்படுத்தப்பட்ட மழைநீர் வடிகால் (SWD) அமைப்பு, அதன் நோக்கத்தை நிறைவேற்றத் தவறிவிட்டது.

முழுமையடையாத இணைப்பு, திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலில் தோல்வி, அறிவியல் பூர்வமற்ற சாய்மானம், திடக் கழிவுகளால் அடைப்பு, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, இவைகளே காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது.

அதாவது,  நகரின் முக்கியப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கு ஒரு முக்கியக் காரணம், நகரெங்கும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை தி.மு.. அரசு திறனுடன் முடிக்காததுதான். குறைந்தது 107 இடங்களில் வடிகால் இணைப்புகள் விடுபட்டிருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, வட சென்னையில் (மாதவரம், புழல், வியாசர்பாடி, மணலிyil அதிகமாக உள்ளது. இதனால் தண்ணீர் கால்வாய்கள் அல்லது கடலை அடைய முடியாமல் தேங்கி நிற்கிறது.

  • ₹4000 கோடி திட்டம் செயல்படுத்துவதில் ஏற்பட்ட தொடர்ச்சியான தடங்கல்கள், வடிகால் அமைப்பைச் செயலற்றதாக்கி விட்டது. சில இடங்களில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டு, வட சென்னையைப் போன்ற இடங்களில் வேலைகள் பின்தங்கியுள்ளன. சில பகுதிகளில் வடிகால் அமைப்பதற்கான சாய்வு அறிவியல் பூர்வமாகச் செய்யப்படாததால், தண்ணீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

            முழுமையடையாத வடிகால் வலைப்பின்னல், போதிய பராமரிப்பின்மை, மற்றும் இணைப்புக் குறைபாடுகள் காரணமாக இந்த ₹4000 கோடி திட்டம் அதன் இலக்கை எட்டவில்லை. வடிகால்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்க அரசு தவறியதும், நீர்வழிகள் மீதான ஆக்கிரமிப்பு நீடித்ததும் இந்தத் திட்டம் தோல்வியடையக் காரணமாக அமைந்ததுள்ளது.